'லீஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்' படத்திலிருந்து 'நீ தாரே' பாடல்: நாளை ஆதித்யா மியூசிக்கில் ரிலீஸ்
இளைஞர்களைக் கவரும் ரொமான்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி வரும் 'லீஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்' (Least Eligible Bachelor) திரைப்படத்திலிருந்து உற்சாகமான பயணப் பாடலான 'நீ தாரே' (Nee Daare) நாளை ஆதித்யா மியூசிக் தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சாலைப் பயணங்களை விரும்பும் இளைஞர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில், புத்துணர்ச்சியூட்டும் மெட்டமைப்பில் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. நட்பு, காதல் மற்றும் பயணத்தின் அழகை விவரிக்கும் வரிகளுடன் துள்ளலான இசையுடன் உருவாகியுள்ள இப்பாடல் வெளியாகும் செய்தி சமூக வலைத்தளங்களில் இசைப் பிரியர்களிடையே நல்ல ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் லீஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் படத்தின் முதல் பாடலான 'நீ தாரே', இளைஞர்களின் டிராவல் பிளேலிஸ்ட்டில் இடம்பிடிக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Ursvamsishekar