போர் வீரனாக களமிறங்கும் நிகில்: 'ஸ்வயம்பு' ரிலீஸ் தேதி விரைவில் அறிவிப்பு!

போர் வீரனாக களமிறங்கும் நிகில்: 'ஸ்வயம்பு' ரிலீஸ் தேதி விரைவில் அறிவிப்பு!

நடிகர் நிகில் சித்தார்த் தனது அசாத்திய உழைப்பால் பான்-இந்தியா அளவில் முன்னணி நாயகனாக உயர்ந்து நிற்கும் நிலையில், அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'ஸ்வயம்பு' படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமா பிஆர்ஓ வம்சி சேகர் இந்த சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். வரலாற்றுப் பின்னணியில் அஞ்சாநெஞ்சம் கொண்ட போர் வீரனாக நிகில் தோன்றும் இந்த பிரம்மாண்ட திரைப்படம் பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது. பிரத்யேக வாள் சண்டை பயிற்சிகள் மற்றும் கடினமான சாகச உடற்பயிற்சிகளை மேற்கொண்டு நிகில் இந்தப் பாத்திரத்திற்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளார். படத்தின் பிரம்மாண்ட செட்கள் ரசிகர்களுக்கு புதிய காட்சி விருந்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்யுக்தா, நபா நடேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் மிகப்பெரிய ஆக்ஷன் அனுபவமாக அமையவுள்ள 'ஸ்வயம்பு' படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்