நிதேஷ் திவாரியின் ராமாயணம் திரைப்படம்: இந்திய மற்றும் ஆங்கில பதிப்புகளின் ரன்டைம் வெளியானது!
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணம்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரன்டைம் விவரங்களை மூவி தமிழ் தளம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. வெளியாகியுள்ள தகவலின்படி, சர்வதேச வெளியீடான ஆங்கிலப் பதிப்பு 2 மணி நேரம் 47 நிமிடங்களும், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளின் பதிப்பு 3 மணி நேரம் 15 நிமிடங்களும் ஓடும் வகையில் இறுதி செய்யப்பட்டுள்ளது. ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த இதிகாசப் படைப்பு, திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்ட காட்சிக் விருந்தாக அமையவுள்ளது. இந்திய ரசிகர்களுக்காக விரிவான உணர்வுப்பூர்வ காட்சிகளுடன் 195 நிமிடங்கள் நீடிக்கும் பதிப்பு திரையிடப்படவுள்ளது. வரும் நவம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஐமேக்ஸ் மற்றும் 3டி உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப வடிவங்களில் 'ராமாயணம்' வெளியாகவுள்ளது. ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து இந்த பிரம்மாண்ட காவியத்தைக் காண உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.
· @_movietamil