நிதேஷ் திவாரியின் 'ராமாயணா' படத்திற்கு யு சான்றிதழ்: யாஷின் ஸ்கிரீன் டைம் குறித்த ருசிகர தகவல்

நிதேஷ் திவாரியின் 'ராமாயணா' படத்திற்கு யு சான்றிதழ்: யாஷின் ஸ்கிரீன் டைம் குறித்த ருசிகர தகவல்

பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படம் குறித்து ஒரு சுவாரசியமான தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த ஓடும் நேரம் சுமார் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது. இதில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கேஜிஎஃப் நாயகன் ராக்கிங் ஸ்டார் யாஷின் திரை நேரம் சுமார் 1 மணி நேரம் 5 நிமிடங்கள் வரை இருக்கும் என கோலிவுட் மற்றும் பாலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கும் இப்படத்தில் யாஷின் அறிமுகம் மற்றும் மோதல் காட்சிகள் மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்திய அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்த இதிகாச திரைப்படத்தின் விசுவல் எஃபெக்ட்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

· @_movietamil

பழைய செய்திகள்