பிரம்மாண்ட ராமாயணம் திரைப்படம் நவம்பர் 5-ல் ரிலீஸ்: டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!
இந்தியாவின் இதிகாசக் கதையை மிக பிரம்மாண்டமாக திரையில் கொண்டுவரும் ராமாயணம் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் நமித் மல்ஹோத்ரா மற்றும் யாஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் மற்றும் சன்னி தியோல் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சர்வதேச இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். சகோதர பாசம், தர்மம் மற்றும் போர்க்களக் காட்சிகளை அதிநவீன தொழில்நுட்பத்துடன் படக்குழு வடிவமைத்துள்ளது. ஐமேக்ஸ் உள்ளிட்ட உயர்தர திரையரங்குகளில் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாகும் ராமாயணம் திரைப்படத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
· Ursvamsishekar