நாளை நள்ளிரவு வெளியாகிறது நிதினின் 30-வது பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்

நாளை நள்ளிரவு வெளியாகிறது நிதினின் 30-வது பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் நிதினின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 30-வது படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை போஸ்டர் நாளை நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகவுள்ளதாக ஸ்ரேஷ்ட் மூவீஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பியானோ, கண்ணாடி மற்றும் பூனை குறியீடுகளுடன் படக்குழு வெளியிட்டுள்ள புதிய கவுண்ட்டவுன் போஸ்டர் இணையத்தில் சினிமா ரசிகர்களின் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மெர்லபாகா காந்தி இயக்கும் இப்படத்தில் நிதினுடன் தமன்னா மற்றும் நபா நடேஷ் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இந்தியில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற 'அந்தாதுன்' படத்தின் தெலுங்கு மறுஉருவாக்கமான இப்படத்தின் முதல் பார்வையை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மகதி ஸ்வர சாகர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சுதாகர் ரெட்டி மற்றும் நிகிதா ரெட்டி தயாரிக்கும் இப்படத்தின் டைட்டிலை வரவேற்கவும், தங்களது அபிமான நாயகனின் பிறந்தநாளைக் கொண்டாடவும் நிதினின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.

· Sreshthmovies

பழைய செய்திகள்