நிதின் மற்றும் ஸ்ரீலீலா இணையும் நிதின் 32: ஜூலை 23 அன்று ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் கவுண்ட்டவுன்!

நிதின் மற்றும் ஸ்ரீலீலா இணையும் நிதின் 32: ஜூலை 23 அன்று ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் கவுண்ட்டவுன்!

நடிகர் நிதினின் 32 ஆவது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜூலை 23 அன்று வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான கவுண்ட்டவுனை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரேஷ்ட் மூவீஸ் தனது எக்ஸ் தளத்தில் உற்சாகமான போஸ்டருடன் துவங்கியுள்ளது. வக்கந்தம் வம்சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நிதினுக்கு ஜோடியாக இளம் முன்னணி நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார். மேலும் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முழுநீள பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. சுதாகர் ரெட்டி மற்றும் நிகிதா ரெட்டி இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் அடுத்தகட்ட தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

· Sreshthmovies

பழைய செய்திகள்