நிதின் 32 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்: இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு!

நிதின் 32 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்: இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகன் நிதின் நடிக்கும் 32 ஆவது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. தயாரிப்பு நிறுவனமான ஸ்ரேஷ்ட் மூவீஸ் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வக்கந்தம் வம்சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நிதினுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவுக்கு கம்பேக் கொடுத்துள்ள ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க கமர்ஷியல் எண்டர்டெய்னராக தயாராகி வரும் இப்படத்தின் கதைக்களம் ரசிகர்களை வெகுவாகக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று மாலை வெளியாகவுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் கதாபாத்திர தன்மையை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Sreshthmovies

பழைய செய்திகள்