நிதின் நடிக்கும் அலியாஸ் ருக்மிணி: 24 மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வைகளைக் கடந்த முதல் பாடல்!
இயக்குநர் முரளி இயக்கத்தில் நடிகர் நிதின் மற்றும் ஆஃபியா சயீத் நடிப்பில் உருவாகி வரும் அலியாஸ் ருக்மிணி திரைப்படத்தின் முதல் பாடலான ருகு ருகு ருக்மிணி வெளியான 24 மணி நேரத்தில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளது. விஜய் புல்கானின் இசையில் அனுராக் குல்கர்னி பாடியுள்ள இப்பாடல் இனிமையான மெலடியாக அமைந்து இசை ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. நேச்சுரல் ஸ்டார் நானி பெருமையுடன் வழங்கும் இத்திரைப்படத்தின் மீதான கவனத்தை இந்தப் பாடல் மேலும் அதிகரித்துள்ளது. காதலும் நகைச்சுவையும் கலந்த குடும்பக் கதையாக உருவாகும் அலியாஸ் ருக்மிணி திரைப்படம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
· Ursvamsishekar