டப்பிங் பணிகளைத் துவங்கிய நிதின்: மாச்சர்ல நியோஜகவர்கம் படக்குழுவின் சுடசுட அப்டேட்!
நடிகர் நிதின் தனது மாச்சர்ல நியோஜகவர்கம் திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை முறைப்படி தொடங்கியுள்ளார். படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், டப்பிங் ஸ்டுடியோவில் நிதின் இருக்கும் புகைப்படத்தை ஸ்ரேஷ்ட் மூவீஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது. எம்.எஸ். ராஜசேகர் ரெட்டி இயக்கத்தில் கமர்ஷியல் ஆக்சன் எண்டர்டெய்னராக உருவாகும் இப்படத்தில் நிதின் சித்தார்த் ரெட்டி என்ற கம்பீரமான ஐஏஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் பஞ்ச் வசனங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு நிதின் டப்பிங் பேசி வருகிறார். கிருத்தி ஷெட்டி, கேத்ரின் தெரசா மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 12 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன் நிகழ்வுகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
· Sreshthmovies