காதலர் தினத்தில் வெளியாகும் நிதினின் சல் மோகன் ரங்கா பட டீசர்

காதலர் தினத்தில் வெளியாகும் நிதினின் சல் மோகன் ரங்கா பட டீசர்

நிதின் மற்றும் மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'சல் மோகன் ரங்கா' திரைப்படத்தின் டீசர் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது என ஸ்ரேஷ்ட் மூவீஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிதினின் 25-வது படமான இப்படத்திற்கு பிரபல இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கதை எழுதியுள்ளார் என்பது ரசிகர்களிடையே கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ண சைத்தன்யா இயக்கத்தில் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னணி ஒளிப்பதிவாளர் நட்டி நடராஜ் காட்சிகளைப் படமாக்கியுள்ளார். பவன் கல்யாண் கிரியேட்டிவ் ஒர்க்ஸ் மற்றும் ஸ்ரேஷ்ட் மூவீஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. நிதினின் முந்தைய வெற்றிப் படமான இஷ்க் படத்திற்குப் பிறகு ஸ்ரேஷ்ட் மூவீஸ் தயாரிக்கும் இப்படம் ரசிகர்களுக்கு சிறந்த ஃபீல் குட் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதல், நகைச்சுவை மற்றும் அழகான அமெரிக்க பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீசரை காதலர் தின சிறப்புப் பரிசாகக் காண ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.

· Sreshthmovies

பழைய செய்திகள்