அக்டோபர் 30 அன்று எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன் டீசர் ரிலீஸ்: நிதின்-ஸ்ரீலீலா இணையும் படம்
நிதின் மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகி வரும் 'எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன்' திரைப்படத்தின் டீசர் வரும் அக்டோபர் 30 அன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்னும் நான்கு நாட்களில் இந்த டீசர் வெளியாவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல கதாசிரியர் மற்றும் இயக்குநர் வக்கந்தம் வம்சி இயக்கும் இப்படத்தில் மூத்த நடிகர் ராஜசேகர் ஒரு முக்கியமான சுவாரசியமான வேடத்தில் நடிக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்ரேஷ்ட் மூவீஸ் பேனரில் சுதாகர் ரெட்டி மற்றும் நிகிதா ரெட்டி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நிதினின் காமெடி மற்றும் கலகலப்பான நடிப்பு ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக அமையும் என படக்குழு கூறியுள்ளது. வரும் டிசம்பர் 8 அன்று திரையரங்குகளில் படம் வெளியாக உள்ள நிலையில், இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Sreshthmovies