தேதியில் மட்டுமே மாற்றம், ஆக்ஷனில் இல்லை: நிதினின் மாச்சர்ல நியோஜகவர்கம் ரிலீஸ் தேதி மாற்றம்!

தேதியில் மட்டுமே மாற்றம், ஆக்ஷனில் இல்லை: நிதினின் மாச்சர்ல நியோஜகவர்கம் ரிலீஸ் தேதி மாற்றம்!

நடிகர் நிதின் நடிப்பில் ஆக்ஷன் கமர்ஷியல் விருந்தாக தயாராகி வரும் மாச்சர்ல நியோஜகவர்கம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக திட்டமிடப்பட்ட தேதியிலிருந்து மாற்றப்பட்டு, சுதந்திர தின விடுமுறை வாரமான ஆகஸ்ட் 12 அன்று படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான ஸ்ரேஷ்ட் மூவீஸ் அறிவித்துள்ளது. தேதியில் மட்டுமே மாற்றம், கலெக்டர் சாரின் அதிரடி ஆக்ஷனில் எந்த மாற்றமும் இல்லை என்ற பஞ்ச் வசனத்துடன் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதில் கிருத்தி ஷெட்டி மற்றும் கேத்ரின் தெரசா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். எம்.எஸ். ராஜசேகர் ரெட்டி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நிதின் ஒரு கம்பீரமான மாவட்ட கலெக்டராக நடித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின கொண்டாட்டத்தோடு திரையரங்குகளில் மாபெரும் வசூல் வேட்டை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

· Sreshthmovies

பழைய செய்திகள்