மாச்சர்ல நியோஜகவர்கம்: அதிரடி ரிலீஸ் தேதியை அறிவித்த நிதின் படக்குழு!
நடிகர் நிதின் நடிப்பில் உருவாகி வரும் மாஸ் கமர்ஷியல் திரைப்படமான மாச்சர்ல நியோஜகவர்கம் படத்தின் உலகளாவிய ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்ரேஷ்ட் மூவீஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தில் நிதினுடன் கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக ஜோடி சேர்ந்துள்ளார். எம்.எஸ். ராஜசேகர் ரெட்டி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு மஹதி ஸ்வர சாகர் இசையமைத்துள்ளார். அரசியல் பின்னணியில் முழுநீள அதிரடி ஆக்சன் படமாக இப்படம் தயாராகிறது. சுதாகர் ரெட்டி மற்றும் நிகிதா ரெட்டி இணைந்து தயாரிக்கும் இப்படம் ஏப்ரல் 29 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் கலெக்டர் ஆக களம் இறங்கும் நிதினின் ஆக்ஷன் அவதாரம் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
· Sreshthmovies