த்ரில்லர் விருந்துக்கு தயாரா: நிதினின் மேஸ்ட்ரோ டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் நிதின், தமன்னா மற்றும் நபா நடேஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மேஸ்ட்ரோ படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 23 அன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்ரேஷ்ட் மூவீஸ் நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ளன. பார்வையற்ற பியானோ கலைஞராக நிதின் நடித்துள்ள இந்த க்ரைம் த்ரில்லர் படத்தை மேர்லபாகா காந்தி இயக்கியுள்ளார். விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் தமன்னா நெகட்டிவ் ஷேட் கலந்த முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நேரடியாக ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் ஆவலை எகிற வைத்துள்ளது. மஹதி ஸ்வர சாகரின் பின்னணி இசையுடன் வெளியாகும் டிரெய்லர் காட்சிகளைக் காண தெலுங்கு சினிமா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
· Sreshthmovies