சூர்யாவின் 'சீன்': தெலுங்கு மாநில திரையரங்கு உரிமையைக் கைப்பற்றிய என்விஆர் சினிமா!

சூர்யாவின் 'சீன்': தெலுங்கு மாநில திரையரங்கு உரிமையைக் கைப்பற்றிய என்விஆர் சினிமா!

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'சீன்' திரைப்படத்தின் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில திரையரங்கு வெளியீட்டு உரிமையை முன்னணி நிறுவனமான என்விஆர் சினிமா கைப்பற்றியுள்ளது. தெலுங்கு திரையுலகில் பெரும் விநியோக வலையமைப்பைக் கொண்டுள்ள என்விஆர் சினிமா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 6 அன்று இவ்விரு மாநிலங்களிலும் அதிகளவிலான திரைகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. சூர்யாவுக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய சந்தை மதிப்பு இருப்பதால் இப்படத்தின் வியாபாரம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் மலையாள இளம் நடிகர் நஸ்லென் வில்லனாக நடிக்கும் இத்திரைப்படம், பான் சவுத் இந்திய அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்