அக்டோபர் 9 தமிழ் திரைப்படங்கள்: 5 புதிய வெளியீடுகள் மற்றும் 3 ரீ-ரிலீஸ் படங்கள் விவரம்

இன்று அக்டோபர் 9 வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகியுள்ள புதிய தமிழ்ப் படங்கள் மற்றும் மறுவெளியீடுகள் குறித்த முழுமையான பட்டியலை நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வாரம் மொத்தம் எட்டு திரைப்படங்கள் ரசிகர்களின் பார்வைக்கு வந்துள்ளன. இதில் 'பருந்து', 'கிட்டி', 'ஆல் பாஸ்', 'தாய் நிலம்' மற்றும் 'பஞ்சாயத்துப் பட்டி' ஆகிய ஐந்து புதிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனுடன் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற விஜய் சேதுபதியின் '96', சிலம்பரசன் நடித்த 'வல்லவன்' மற்றும் மலையாள பிளாக்பஸ்டரான 'சிபிஐ 5: தி பிரைன்' ஆகிய மூன்று வெற்றிப் படங்கள் மறுவெளியீடாகத் திரைக்கு வந்துள்ளன. புதிய படங்களோடு மறுவெளியீட்டுப் படங்களும் களமிறங்கியுள்ளதால் இந்த வார இறுதியில் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு விதவிதமான சினிமா விருந்து காத்திருக்கிறது. எந்தெந்த படங்கள் ரசிகர்களை அதிகம் ஈர்க்கும் என்பதை வரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்