அதிகாரப்பூர்வமாக இணைந்த விஜய் மற்றும் அட்லீ கூட்டணி: ஏஜிஎஸ் தயாரிப்பில் தளபதி 63
தெறி மற்றும் மெர்சல் ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மீண்டும் இணையும் தளபதி 63 திரைப்படத்தை தயாரிப்பதாக ஏஜிஎஸ் சினிமாஸ் மற்றும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கல்பதி எஸ். அகோரம், கல்பதி எஸ். கணேஷ் மற்றும் கல்பதி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. மெர்சல் படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணையும் இந்த கூட்டணி, அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
· Rekhshc