மோகன்லால் படத் தயாரிப்பாளர் வாங்கிய 'ஓம்' கேரள தியேட்டர் உரிமை: நவம்பர் 20ல் ரிலீஸ்!

மோகன்லால் படத் தயாரிப்பாளர் வாங்கிய 'ஓம்' கேரள தியேட்டர் உரிமை: நவம்பர் 20ல் ரிலீஸ்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஓம்' திரைப்படத்தின் கேரளா தியேட்டர் விநியோக உரிமையை மோகன்லாலின் 'எல்368' படத் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் பெரும் தொகைக்குக் கைப்பற்றியுள்ளார். இந்த அதிகாரப்பூர்வ தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இப்படத்தின் உரிமையைப் பெற்றிருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை பல மடங்கு அதிகரித்துள்ளது. இப்படத்தின் காட்சிகள் மற்றும் கதைக்களம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விநியோக வட்டாரங்களில் இப்படத்திற்கான வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வரும் நவம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. கேரளாவில் மிக அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட விநியோகஸ்தர் தரப்பு தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. விரைவில் பிற மாநில வெளியீட்டு விபரங்களும் வெளியிடப்படும்.

· MalayalamReview

பழைய செய்திகள்