மெட்ரோ ரயில்களில் தீவிர விளம்பரம்: நவம்பர் 20ல் வெளியாகும் ஓம் திரைப்படம்!
தமிழ் திரையுலகில் புதுமையான கதைகளத்துடன் தயாராகி வரும் 'ஓம்' (OM) திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது முழுவீச்சில் தீவிரமடைந்துள்ளன. திரையரங்கு ரிலீஸுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் படக்குழுவினர் வித்யாசமான பிரமோஷன்களை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களின் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் இப்படத்தின் விளம்பரப் பதாகைகள் கண்ணைக் கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கும் மெட்ரோ வழித்தடங்களில் இந்த விளம்பர உத்திகள் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளன. சமூக வலைத்தளங்களிலும் இந்த மெட்ரோ விளம்பரப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சினிமா ஆர்வலர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. 'ஓம்' திரைப்படம் வரும் நவம்பர் 20 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
· @_movietamil