இன்னும் ஒரே நாள் மட்டுமே: டிக்கெட் முன்பதிவில் பட்டையைக் கிளப்பும் சூர்யாவின் சீன்

இன்னும் ஒரே நாள் மட்டுமே: டிக்கெட் முன்பதிவில் பட்டையைக் கிளப்பும் சூர்யாவின் சீன்

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஜித்து மாதவன் இயக்கியுள்ள 'சீன்' திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளது. ரசிகர்கள் தங்களது டிக்கெட்டுகளை உடனே முன்பதிவு செய்யுமாறு திரைப்பட மக்கள் தொடர்பாளர் சதீஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நவம்பர் 6 தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளியாகும் இப்படத்தில் நஸ்ரியா பகத் மற்றும் நஸ்லென் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். மாறுபட்ட கதைகளத்தில் சஸ்பென்ஸ் மற்றும் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை கலந்த படமாக இது இருக்கும் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இளைஞர்கள் முதல் குடும்பங்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு மின்னல் வேகத்தில் நடைபெற்று வரும் சூழலில், பல இடங்களில் முதல் நாள் காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளன. குடும்பத்துடன் திரையரங்குகளில் சென்று தீபாவளியைக் கொண்டாட 'சீன்' திரைப்படம் சிறந்த தேர்வாக அமையும் என்று திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

· Prosathish

பழைய செய்திகள்