தெய்வீக வெற்றியின் ஒரு வருட நிறைவு: காந்தாரா சாப்டர் 1 நினைவுகளைப் பகிர்ந்த ரிஷப் ஷெட்டி
இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஆன்மீக மண்ணின் பின்னணியில் அமைந்த பிரம்மாண்ட காவியமான 'காந்தாரா சாப்டர் 1' வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் மற்றும் இயக்குநர் ரிஷப் ஷெட்டி ஆகியோர் உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர். நமது மண்ணின் தொன்மையான வேர்களையும், கலாச்சார நம்பிக்கைகளையும் கொண்டாடிய இந்த திரைப் பயணம் உலகளாவிய ரசிகர்களின் அன்பினால் மறக்க முடியாத வெற்றிப் பயணமாக மாறியது என்று படக்குழுவினர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர். ரிஷப் ஷெட்டியின் அசுரத்தனமான நடிப்பும் அஜனீஷ் லோக்நாத்தின் மெய்சிலிர்க்க வைக்கும் இசையும் திரையரங்குகளில் ரசிகர்களை மெய்மறக்கச் செய்தது. முதல் பாகம் மற்றும் சாப்டர் 1 பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, காந்தாரா பிரபஞ்சத்தின் அடுத்தடுத்த கட்ட நகர்வுகளைக் காண இந்திய சினிமா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
· Actor Kayal Devaraj