ஆஸ்கர் 2027க்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ படம் 'கோந்தால்': சர்வதேச உரிமையை கைப்பற்றிய ஹோம்பாலே பிலிம்ஸ்!

ஆஸ்கர் 2027க்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ படம் 'கோந்தால்': சர்வதேச உரிமையை கைப்பற்றிய ஹோம்பாலே பிலிம்ஸ்!

பல்வேறு விருதுகளைக் குவித்த மராத்தி திரைப்படமான 'கோந்தால்' (Gondhal), 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்கர் விருதுப் போட்டிக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ பதிவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய சினிமா வட்டாரத்தில் பெரும் கவனம் பெற்றுள்ள இந்த படத்தின் சர்வதேச வெளியீட்டு உரிமையை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. 'கே.ஜி.எஃப்', 'காந்தாரா', 'சலார்' போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், ஆஸ்கர் களத்தில் போட்டியிடும் தரமான படைப்பான 'கோந்தால்' படத்தை வெளிநாடுகளில் வெளியிடுவது இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது. உள்ளூர் கதையை உலக அரங்குக்கு கொண்டு செல்லும் நோக்கில் இந்த வெளியீட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மண்ணின் கலாச்சாரத்தையும் மனித உறவுகளையும் யதார்த்தமாக பேசும் இப்படம் விரைவில் உலகளாவிய திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சர்வதேச அளவில் இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இதன் புரமோஷன் பணிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.

· Ursvamsishekar

பழைய செய்திகள்