ஓட்டம் துள்ளல் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சர்வைவல் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள 'ஓட்டம் துள்ளல்' திரைப்படம் நவம்பர் 6 முதல் முன்னணி ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளதாக பிரபல திரைப்பட விநியோக நிறுவனமான ஏபி இண்டர்நேஷனல் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் அறிவித்துள்ளது. மகிழ்ச்சியான குடும்ப சந்திப்பு ஒன்று எதிர்பாராத விதமாக எவ்வாறு உயிர் பிழைப்பதற்கான கடுமையான போராட்டமாக மாறுகிறது என்ற விறுவிறுப்பான கதைகளத்தை இப்படம் கொண்டுள்ளது. இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் மனோரமா மேக்ஸ் ஆகிய தளங்களில் இப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. மேலும் இந்தியா தவிர்த்த உலக நாடுகளில் சிம்ப்ளி சவுத் மற்றும் ஏபி இண்டர்நேஷனல் சவுத் சினிமா வழியாக ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். திரையரங்குகளில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இப்படம், வார இறுதி நாட்களில் வீட்டில் இருந்தபடி விறுவிறுப்பான த்ரில்லர் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஓடிடி ரசிகர்களுக்கு ஒரு சிறந்த திரைப்பட அனுபவமாக அமையும்.
· Apifilms