பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘மக்கள் காவலன்’: டிசம்பர் 4 அன்று திரையரங்குகளில் ரிலீஸ்!

பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘மக்கள் காவலன்’: டிசம்பர் 4 அன்று திரையரங்குகளில் ரிலீஸ்!

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் பிர்லா ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான ‘மக்கள் காவலன்’ வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் எப்போதுமே தங்களை பாதுகாப்பவரை மட்டுமே தங்களின் தலைவராக தேர்வு செய்வார்கள் என்ற அழுத்தமான முழக்கத்துடன் கூடிய அறிவிப்பு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மணிகண்டன், திவ்யா ஸ்ரீபாதா, சாபுமோன் அப்துசமத், உன்னிமாயா பிரசாத் உள்ளிட்ட பல சிறந்த நடிகர்கள் இதில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமூக அக்கறையும் எளிய மக்களின் உணர்வுகளையும் திரையில் ஆழமாகப் பேசும் படைப்பாக இது உருவாகி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் டிரெய்லரை காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்