அருண் கார்த்தி நடிக்கும் 'பனிவிழும் இரவு': அக்டோபர் 30 திரையரங்குகளில் ரிலீஸ்!
அருண் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள புதிய சஸ்பென்ஸ் மிஸ்ட்ரி திரைப்படமான 'பனிவிழும் இரவு' வரும் அக்டோபர் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாவி கிரியேஷன்ஸ் மற்றும் வேல் இன்போடெயின்மென்ட் கிரியேட்டிவ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. எஸ்.ஆர்.ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ஏனாக்ஷி கங்குலி நடித்துள்ளார். மர்மமும் திருப்பங்களும் நிறைந்த இரவு நேரப் பயணக் கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சதா முருகன் இசையமைக்க, ஜெயக்குமார் தங்கவேல் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இரவில் நடக்கும் மர்ம நிகழ்வுகளைத் துப்பறியும் விறுவிறுப்பான திரைக்கதை இதில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 30 அன்று திரையரங்குகளில் களமிறங்கும் 'பனிவிழும் இரவு' திரைப்படம், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கதைகளை விரும்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சுவாரசியமான அனுபவமாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் குறித்த கூடுதல் விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளன.
· Idiamondbabu