திரையரங்குகளில் இன்று வெளியானது மிஸ்ட்ரி திரில்லர் பனிவிழும் இரவு
தமிழ் திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 'பனிவிழும் இரவு' என்ற சஸ்பென்ஸ் மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பத்திரிகையாளர் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் படத்துக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்து வருவதாக படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. அருண் கார்த்தி மற்றும் ஏனாக்ஷி கங்குலி முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை எஸ்.ஆர். ராஜேஷ் இயக்கியுள்ளார். பவி கிரியேஷன்ஸ் மற்றும் வேல் இன்போடெயின்மென்ட் கிரியேட்டிவ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சதா முருகன் இசையமைத்துள்ளார். ஜெயக்குமார் தங்கவேல் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இரவு நேரப் பின்னணியில் நடக்கும் மர்ம முடிச்சுகளையும், அடுத்தடுத்து நிகழும் அதிரடி திருப்பங்களையும் மையமாகக் கொண்டு விறுவிறுப்பான பாணியில் இந்தத் திரில்லர் படம் உருவாக்கப்பட்டுள்ளது. த்ரில்லர் படங்களை விரும்பிப் பார்க்கும் சினிமா ரசிகர்களுக்கு இந்த வார இறுதியில் திரையரங்குகளில் 'பனிவிழும் இரவு' ஒரு சிறந்த தேர்வாக அமையும் என்று திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
· Idiamondbabu