உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட கூடு: பனோரமா ஸ்டுடியோஸின் புதிய தமிழ் சினிமா வருகை!

உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட கூடு: பனோரமா ஸ்டுடியோஸின் புதிய தமிழ் சினிமா வருகை!

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான பனோரமா ஸ்டுடியோஸ், கூடு என்ற புதிய படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அதிகாரப்பூர்வமாகத் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. நிஜ வாழ்க்கையில் நடைபெற்ற நெகிழ்ச்சியான ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் உலகளவில் வெளியாகிறது. மனிதநேயத்தின் நற்குணங்களைப் போற்றும் களத்தில் இப்படத்தை இயக்குநர் ஜோயல் விஜய் இயக்கியுள்ளார். குமார் மங்கத் மற்றும் அபிஷேக் பதக் இணைந்து வழங்கும் இப்படத்தில் ஜெயபிரகாஷ், ரச்சிதா மகாலட்சுமி, விவேக் பிரசன்னா, தேவி தேவதாஸ் உள்ளிட்ட திறமையான நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, மனோஜ் கிருஷ்ணா இசையமைத்துள்ளார். எளிய மனிதர்களின் உணர்வுப்பூர்வமான வாழ்க்கைப் போராட்டத்தையும் வாழ்வியல் அழகையும் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள கூடு, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டுத் தேதி மற்றும் டிரெய்லர் உள்ளிட்ட அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.

· Only Kollywood

பழைய செய்திகள்