'பத்து நாள் ராஜா' பட ஆடியோ உரிமம்: கைப்பற்றியது முன்னணி நிறுவனம் சரிகம சவுத்!
சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கும் 'பத்து நாள் ராஜா' திரைப்படத்தின் ஆடியோ உரிமத்தை முன்னணி இசை நிறுவனமான சரிகம சவுத் கைப்பற்றியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டர் சமூக வலைத்தளங்களில் படக்குழுவினரால் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது. எஸ்.ஜி.எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், குரு சரவணன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைக்கிறார். சரண்யா, ஆதியா பிரசாத், சரவணன், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சதீஷின் இயல்பான நகைச்சுவை மற்றும் ஆதி சாய்குமாரின் அதிரடி நடிப்பு என இருவேறு பாணிகள் இப்படத்தில் கைகோர்த்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் ஒரு புதுவிதமான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சரிகம சவுத் நிறுவனம் படத்தின் ஆடியோ உரிமத்தை வாங்கியுள்ள நிலையில், ஜிப்ரானின் இசையில் உருவாகியுள்ள முதல் சிங்கிள் பாடல் மற்றும் முழு ஆடியோ வெளியீடு குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj