ஆர்கே சாகரின் 'தி 100' ட்ரெய்லரை வெளியிட்ட பவன் கல்யாண்: இணையத்தில் வைரல்

ஆர்கே சாகரின் 'தி 100' ட்ரெய்லரை வெளியிட்ட பவன் கல்யாண்: இணையத்தில் வைரல்

ஆந்திர மாநில துணை முதல்வரும் முன்னணி நட்சத்திரமுமான பவர் ஸ்டார் பவன் கல்யாண், ஆர்கே சாகர் நடிப்பில் உருவாகியுள்ள 'தி 100' திரைப்படத்தின் அனல் பறக்கும் ட்ரெய்லரை நேரில் வெளியிட்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்துள்ளார். காவல்துறை பின்னணியில் விறுவிறுப்பான க்ரைம் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில், ஆர்கே சாகர் அதிரடி ஐபிஎஸ் அதிகாரியாக மிகவும் மிரட்டலான தோற்றத்தில் நடித்துள்ளார். ஓம்கார் சசிதர் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்துப் பாராட்டிய பவன் கல்யாண், படத்தின் காட்சிகளும் விறுவிறுப்பான மேக்கிங்கும் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் கூறி ஒட்டுமொத்தப் படக்குழுவினரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். கிரியா பிலிம் கார்ப் நிறுவனம் தயாரித்துள்ள 'தி 100' திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. பவன் கல்யாணின் இந்த ஆதரவும் ட்ரெய்லர் வெளியீடும் படத்திற்கான எதிர்பார்ப்பைத் தெலுங்கு சினிமா வட்டாரத்திலும் இணையத்திலும் பன்மடங்கு உயர்த்தியுள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்