பழியும் பழிதீர்த்தலும்: மிரட்டலான காட்சிகளுடன் வெளியானது 'பழித்திணை' பட டிரெய்லர்!

பழியும் பழிதீர்த்தலும்: மிரட்டலான காட்சிகளுடன் வெளியானது 'பழித்திணை' பட டிரெய்லர்!

இயக்குநர் கண்ணன் ராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படமான 'பழித்திணை' படத்தின் விறுவிறுப்பான டிரெய்லர் தற்போது இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 'பழியும் பழிதீர்த்தல் நிமித்தமும்' என்ற அழுத்தமான கருவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த டிரெய்லரில், பழிவாங்கும் உணர்ச்சிகளும் மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. உண்மைத்தன்மை மாறாத களமும், எதிர்பாராத திருப்பங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. திரைக்கதையில் உள்ள விறுவிறுப்பு டிரெய்லரிலேயே வெளிப்படுவதால், த்ரில்லர் மற்றும் கிரைம் படங்களை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு இது சிறந்த விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் மிக விரைவில் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்