லவ் ரஞ்சன் வழங்கும் பெஹ்லா பியார் தூஸ்ரி பார்: அக்டோபர் 23 அன்று திரையரங்குகளில் ரிலீஸ்
லவ் ஃபிலிம்ஸ் மற்றும் பென் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் புதிய காதல் திரைப்படமான 'பெஹ்லா பியார் தூஸ்ரி பார்' (Pehla Pyaar Doosri Baar) வரும் அக்டோபர் 23 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு 'ஹைன் கோன் யே லோக்?' என்ற சுவாரசியமான வீடியோ முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். லவ் ரஞ்சன் மற்றும் அங்குர் கார்க் தயாரித்துள்ள இந்த ரொமான்டிக் டிராமா படத்தில் ஸ்பர்ஷ் வாலியா, அலிஷா சோப்ரா, குணால் வைத், சாக்ஷி வைத்யா மற்றும் பிரபல நகைச்சுவை கலைஞர் அனுபவ் சிங் பஸ்ஸி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளைஞர்களின் காதலையும் அதில் ஏற்படும் சிக்கல்களையும் நகைச்சுவை ததும்ப பேசும் படமாக இது உருவாகியுள்ளது. இளமை துள்ளும் பாடல்கள் மற்றும் கலகலப்பான காட்சிகளுடன் தயாராகியுள்ள இப்படம் தீபாவளிப் பண்டிகை காலத்தை ஒட்டி அக்டோபர் 23 அன்று இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
· Penmovies