லவ் ரஞ்சன் தயாரிப்பில் உருவான பஹ்லா ப்யார் தூஸ்ரி பார்: துள்ளலான டிரெய்லர் வெளியானது
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் வழங்கும் பஹ்லா ப்யார் தூஸ்ரி பார் திரைப்படத்தின் முன்னோட்ட டிரெய்லர் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆறு புதிய இளம் நட்சத்திரங்களை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தும் துடிப்பான இளமைக்கால வண்ணமயமான காதல் கதையாக இப்படம் மிகுந்த சுவாரசியத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. அனுஜ் சைனி இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்பர்ஷ் வாலியா, அலிஷா சோப்ரா, குணால் வைத், சாக்ஷி வைத்யா, துஷார் சிப்பர் மற்றும் சர்குன் கவுர் ஆகியோர் முன்னணி கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கல்லூரி நட்பு, முதல் காதல் பரவசம், அதனால் ஏற்படும் மோதல்கள், ஏமாற்றங்கள் மற்றும் இளமைப் பருவ உணர்வுகளை மிக நகைச்சுவையாகவும் கலகலப்பாகவும் காட்டும் படைப்பாக இது அமைந்துள்ளது. லவ் பிலிம்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த ரொமாண்டிக் காமெடி பொழுதுபோக்குத் திரைப்படம் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் உலகளவில் இளசுகளின் கொண்டாட்டத்திற்கு வரவுள்ளது.
· Penmovies