நெஞ்சை உருக்கும் வீரத்தின் கதை: அமரன் 2 ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் பென் மூவிஸ்!
சிவகார்த்திகேயனின் நடிப்பில் இந்திய அளவில் மாபெரும் கவனத்தை ஈர்த்த 'அமரன்' திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, படத்தின் பிரபல வட இந்திய விநியோகஸ்தரான பென் மூவிஸ் நிறுவனம் சிறப்பு நினைவூட்டல் வீடியோவை வெளியிட்டுள்ளது. தியாகம், உண்மையான காதல் மற்றும் எல்லையற்ற தேசப்பற்றை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் திரையரங்குகளில் பார்த்த கோடிக்கணக்கான ரசிகர்களைக் கண்கலங்க வைத்தது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், அவரது காதல் மனைவியாக சாய் பல்லவியும் தங்களின் உயிரோட்டமான நடிப்பால் கதாபாத்திரங்களுக்கு கம்பீரமாக உயிரூட்டியிருந்தனர். தமிழ்நாட்டைத் தாண்டி இந்தி மற்றும் பிற மாநிலங்களிலும் அமரன் திரைப்படம் திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இரண்டு ஆண்டுகள் கடந்தாலும் அந்த ஒப்பற்ற தியாகத்தின் கதை மக்களின் இதயங்களை விட்டு என்றும் நீங்காது என்று சினிமா பிரியர்களும் பொதுமக்களும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
· Penmovies