இந்திய சினிமா பங்களிப்பிற்காக பென் ஸ்டுடியோஸ் ஜெயந்திலால் கடாவுக்கு வரலாற்று சிறப்புமிக்க ஐஃபா விருது
இந்திய திரைப்படத்துறையின் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான பென் ஸ்டுடியோஸின் நிறுவனர் டாக்டர் ஜெயந்திலால் கடா, இந்திய சினிமாவுக்கு ஆற்றிய ஈடு இணையற்ற சேவைகளுக்காக மதிப்புமிக்க ஐஃபா விருதைப் பெற்றுள்ளார். இந்த வரலாற்று கௌரவத்தை சர்வதேச ஐஃபா அமைப்பு தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் ஒருவருக்கு ஐஃபா விருது வரலாற்றில் இந்த உயரிய வாழ்நாள் கௌரவம் வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும். பல தசாப்தங்களாக சிறந்த படங்களை அடையாளம் கண்டு, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்ததில் ஜெயந்திலால் கடாவின் திரைப்படத் தொலைநோக்குப் பார்வை முக்கிய பங்கு வகித்துள்ளது. எஸ். எஸ். ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான ஆர்ஆர்ஆர் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியவாடி உள்ளிட்ட பல மெகா ஹிட் திரைப்படங்களின் வெற்றிப் பயணத்தில் இணைந்து நின்ற அவருக்கு திரைத்துறையினரும் சினிமா வர்த்தக ஆய்வாளர்களும் தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
· Jayantilalgada