எஸ்.எஸ். ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' படத்தை வட இந்தியாவில் வழங்கும் பென் ஸ்டுடியோஸ்!
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் வரலாற்று பிரம்மாண்ட திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தை வட இந்திய திரையரங்குகளில் வழங்குவதாக பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான பென் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிவிவி தனய்யா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோருடன் பாலிவுட் பிரபலங்களான அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜெயந்திலால் கடா தலைமையிலான பென் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தின் விநியோக உரிமையைப் பெற்றுள்ளது இந்தி சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த பிரம்மாண்ட திரைப்படம், பான்-இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக திரைக்கு வரத் தயாராகி வருகிறது.
· Penmovies