காதல் வலியைப் பேசும் 'பேசாமலே' மியூசிக் வீடியோ வெளியானது: ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு

காதல் வலியைப் பேசும் 'பேசாமலே' மியூசிக் வீடியோ வெளியானது: ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு

"காதலே, கண்ணீருமாய் கரைந்தாய்" என்ற நெகிழ வைக்கும் வரிகளுடன் தயாரான 'பேசாமலே' இசை ஆல்பத்தின் முழுமையான வீடியோ பாடல் தற்போது சோனி மியூசிக் சவுத் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. சிரி சாண்டர் மற்றும் ஆரியா கயால் இணைந்து நடித்துள்ள இந்த பாடல் வெளியானது முதலே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. காதல் பிரிவின் வலியையும் உணர்ச்சிப் போராட்டங்களையும் அழகியல் குறையாமல் காட்சிப்படுத்தியுள்ளனர். பாடலின் மெல்லிசைக்கு ஏற்ப கதாபாத்திரங்களின் வெளிப்பாடுகளும் பின்னணி இசையும் ஒன்றிணைந்து கேட்போரைத் திரையுடன் ஒன்ற வைக்கின்றன. சுயாதீன இசைக் கலைஞர்களின் புதிய முயற்சிகளுக்கு நல்ல களம் அமைத்துக் கொடுக்கும் வரிசையில், சோனி மியூசிக் வெளியிட்டுள்ள இந்த வீடியோ ஆல்பம் காதல் ரசிகர்களின் ரசனைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

· Sony Music South

பழைய செய்திகள்