உலகளவில் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய முதல் நாள் வசூல் சாதனை: பொன்னியின் செல்வன் 1 சாதனை!
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 1' திரைப்படம் உலகளவில் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக நன்றி தெரிவித்து அறிவித்துள்ளது. விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்த இந்த வரலாற்று காவியத்திற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் திரைப்பட விரும்பிகள் ஏகோபித்த வரவேற்பை அளித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் திரையரங்குகளில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளன. முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்துள்ள பொன்னியின் செல்வன் 1, விடுமுறை நாட்களிலும் குடும்பம் குடும்பமாக மக்களை திரையரங்குகளுக்கு ஈர்த்து வருகிறது. சோழர்களின் வரலாற்று பெருமையை உலக அரங்கில் உயர்த்தியதில் இப்படம் முக்கிய பங்கு வகிப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
· Lyca Productions