பிரபாஸ் பிறந்தநாள் ஸ்பெஷல்: ஃபவுஜி படத்தின் ‘Who is he?’ வீடியோ ரிலீஸ் அறிவிப்பு!
ரெபல் ஸ்டார் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஃபவுஜி’ திரைப்படத்தின் சிறப்பு வீடியோ முன்னோட்டம் இன்று வெளியாகவுள்ளதாக மக்கள் தொடர்பாளர் டயமண்ட் பாபு தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். சீதாராமம் படத்தை இயக்கி வரவேற்பைப் பெற்ற ஹனு ராகவபுடி இப்படத்தை இயக்குகிறார். வரலாற்று ராணுவப் பின்னணியில் உருவாகும் இப்படத்தில், பிரபாஸுக்கு ஜோடியாக இமான்வி அறிமுகமாகிறார். மேலும் மிதுன் சக்ரவர்த்தி, ஜெயபிரதா, அனுபம் கேர் போன்ற இந்திய சினிமாவின் மூத்த நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கிறது. விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்தின் ‘Who is he?’ என்ற வீடியோ, ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்கு உற்சாகமூட்டும் வகையில் வெளியாகிறது. பிரபாஸின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கும் விதமாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
· Idiamondbabu