பிரபாஸின் ஃபௌஜி சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு: 2027 மார்ச் 19-ல் பிரம்மாண்ட ரிலீஸ்!

பிரபாஸின் ஃபௌஜி சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு: 2027 மார்ச் 19-ல் பிரம்மாண்ட ரிலீஸ்!

பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ திரைப்படத்திலிருந்து சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. "1932 முதல் தேடப்படும் மோஸ்ட் வான்டட் ரெபல் சோல்ஜர்" என்ற அதிரடிப் பின்னணியுடன் இந்த வீடியோ காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ‘சீதா ராமம்’ படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி இயக்கும் இப்படம், சுதந்திரப் போராட்ட கால பின்னணியில் தீவிரமான ராணுவப் போர்க்களக் கதையாக உருவாகி வருகிறது. பிரபாஸின் புதிய கரடுமுரடான அதிரடித் தோற்றம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், காட்சிகளின் தீவிரத்தன்மை காரணமாக படத்திற்கு 'ஏ' (A) சான்றிதழ் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் பேச்சுக்கள் எழுந்துள்ளன. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம் வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் பல மொழிகளில் திரைக்கு வரவுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் பிரபாஸின் இந்த அதிரடி அவதாரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

· @_movietamil

பழைய செய்திகள்