பிரபாஸின் 'ஃபௌஜி': ஒளிப்பதிவாளர் சுதீப் சாட்டர்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ரிலீஸ் தேதியை நினைவூட்டிய படக்குழு!

பிரபாஸின் 'ஃபௌஜி': ஒளிப்பதிவாளர் சுதீப் சாட்டர்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ரிலீஸ் தேதியை நினைவூட்டிய படக்குழு!

ஹனு ராகவபுடி இயக்கத்தில் ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் 25-வது பிரம்மாண்ட திரைப்படமான 'ஃபௌஜி' (#Prabhas25) படத்தின் முதன்மை ஒளிப்பதிவாளர் சுதீப் சாட்டர்ஜிக்கு படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து ரிலீஸ் தேதியை நினைவூட்டியுள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இமான்வி நடிக்கிறார். இவர்களுடன் மிதுன் சக்ரவர்த்தி, ஜெயபிரதா, அனுபம் கேர் என இந்தியத் திரையுலகின் ஜாம்பவான்கள் பலரும் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். பிரம்மாண்ட வரலாற்றுப் பின்னணியில் இந்திய ராணுவ வீரனின் காதல் மற்றும் தியாகத்தை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. சுதீப் சாட்டர்ஜியின் விஷுவல் விருந்தாக உருவாகி வரும் இத்திரைப்படம் 2027-ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கான படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்