பிரபாஸின் பிரம்மாண்ட படம் 'பௌஜி': ரிலீஸ் தேதியுடன் வெளியான அனல் பறக்கும் மிரட்டல் வீடியோ!

பிரபாஸின் பிரம்மாண்ட படம் 'பௌஜி': ரிலீஸ் தேதியுடன் வெளியான அனல் பறக்கும் மிரட்டல் வீடியோ!

பான்-இந்தியா நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகும் வரலாற்று ஆக்‌ஷன் திரைப்படமான 'பௌஜி' (Fauzi) குறித்த அதிரடி வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு ராணுவ வீரன், ஒரு வியூகவாதி, ஒரு உளவுப் படை அதிகாரி என்ற அதிரடி வாசகங்களுடன் பௌஜி கோப்பு எண் 25 (File No.25) வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 1940களில் நடைபெறும் ராணுவ வரலாற்றுப் பின்னணியில் அமையவுள்ள இப்படத்தில் பிரபாஸின் ஆக்‌ஷன் காட்சிகள் மிக விசேஷமாக வடிவமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீதா ராமம் புகழ் இயக்குனர் ஹனு ராகவபுடியின் இயக்கத்தில் உருவாகும் படம் என்பதால் எமோஷன் கலந்த கதைக்களத்திற்கு பஞ்சம் இருக்காது. இப்படத்தை வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. பிரபாஸின் இந்த புதுமையான வரலாற்று கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெருமகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்