பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி' படத்தின் அதிரடி தீம் இசை வெளியீடு: விஷால் சந்திரசேகர் இசையில் மிரட்டும் 'ஹூ இஸ் ஹி'!
ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 25வது திரைப்படமான 'ஃபௌஜி' திரைப்படத்தின் 'ஹூ இஸ் ஹி' (Who is He?) என்ற ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் தீம் பாடல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இத்திரைப்படத்தில் இமான்வி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் மிதுன் சக்கரவர்த்தி, ஜெயபிரதா, அனுபம்கேர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் அமைத்துள்ள இந்த மிரட்டலான இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இராணுவப் பின்னணியில் அமையவுள்ள இப்படம் வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த தீம் வெளியீட்டின் மூலம் படத்தின் மீதான ஆவல் ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.
· Actor Kayal Devaraj