சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட்': மிரட்டலான போஸ்டருடன் ரிலீஸ் தேதி வெளியானது!
இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமான பிரபாஸ் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் 'ஸ்பிரிட்' (Spirit) திரைப்படத்தின் புதிய போஸ்டர் மற்றும் உலகளாவிய ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் 2027 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனிமல் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் படம் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடக்கம் முதலே உச்சத்தில் உள்ளது. 'ஒன் பேட் ஹாபிட்' (One Bad Habit) என்ற தலைப்புக் குறிப்புடன் பிரபாஸின் மாஸ் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் பிரபாஸுடன் இணைந்து திரிப்தி திம்ரி, விவேக் ஓபராய் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி-சீரிஸ் நிறுவனம் மற்றும் வாங்கா பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கின்றன. பல மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் 'ஸ்பிரிட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 2027 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 29 அன்று வெள்ளித்திரையில் இப்படம் தீயாய் இறங்கவுள்ளது.
· Actor Kayal Devaraj