பிரபாஸ் - சந்தீப் ரெட்டி வங்கா இணையும் 'ஸ்பிரிட்': படப்பிடிப்புத் தள புகைப்படம் வைரல்!

பிரபாஸ் - சந்தீப் ரெட்டி வங்கா இணையும் 'ஸ்பிரிட்': படப்பிடிப்புத் தள புகைப்படம் வைரல்!

'அனிமல்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் புதிய திரைப்படமான 'ஸ்பிரிட்' (Spirit) படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பான் இந்திய நட்சத்திர நாயகன் பிரபாஸ் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் பிரபாஸ் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புதிய புகைப்படம் வெளியாகி இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபாஸ் காக்கிச் சட்டை அணியும் திரைப்படம் என்பதால் ரசிகர்களின் ஆர்வம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. டி-சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பகட்ட காட்சிகள் முழுவீச்சில் படமாக்கப்பட்டு வருகின்றன. சந்தீப் வங்காவின் அதிரடியான கதைக்களத்தில் பிரபாஸைக் காண பான் இந்திய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

· @_movietamil

பழைய செய்திகள்