2027 தீபாவளிக்கு பிரபாஸின் ஸ்பிரிட் அதிரடி வேட்டை: அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி!
இந்தியத் திரையுலகின் மாபெரும் நட்சத்திரமான பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி தீபாவளி விருந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் மற்றும் மக்கள் தொடர்பாளர் வம்சி சேகர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த அதிரடி அப்டேட்டை உறுதிப்படுத்தியுள்ளார். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் பிரபாஸ் இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட ஆக்ஷன் அவதாரத்தில் தோன்றுகிறார். அனிமல் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் படம் என்பதால், இந்திய அளவில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 2027 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் பான் இந்தியா திரைப்படமாக ஸ்பிரிட் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு பிரபாஸ் ரசிகர்களுக்கு உற்சாகக் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
· Ursvamsishekar