ரெபல் ஸ்டார் பிரபாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து: 418 படக்குழுவிற்கு ஆதரவு அளித்த நாயகன்

ரெபல் ஸ்டார் பிரபாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து: 418 படக்குழுவிற்கு ஆதரவு அளித்த நாயகன்

இயக்குநர் கீர்த்தன் நடகவுடா இயக்கத்தில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் '418' திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு பிரபாஸ் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். ரசிகர்களால் பாசத்தோடு டைனோசர் என அழைக்கப்படும் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள '418' தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் திகில் காட்சிகளும் எதிர்பாராத திருப்பங்களும் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சமீபகாலமாக திறமையான இளம் படைப்பாளிகள் மற்றும் புதுமையான முயற்சிகளுக்குத் தொடர்ந்து தனது ஆதரவை வழங்கி வரும் பிரபாஸ், இப்படத்திற்கும் வாழ்த்து கூறியிருப்பது படக்குழுவினருக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. இதற்காக பிரபாஸுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு வீடியோ ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிடவுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்