பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்க வரும் பிரபாஸ்: அடுத்தடுத்த 4 மெகா பட்ஜெட் படங்களின் முழு விவரம்!
பான் இந்தியா திரையுலகின் வசூல் நாயகனான பிரபாஸ், அடுத்தடுத்து நடிக்கவுள்ள நான்கு பிரம்மாண்ட திரைப்படங்களின் கால அட்டவணை வெளியாகி சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகும் ‘ஃபௌஜி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து 2027 மார்ச் மாதம் ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தில் தீவிரமான போலீஸ் அதிகாரியாக பிரபாஸ் நடித்து வருகிறார்; இப்படம் 2027 தீபாவளிக்கு திரைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நாக் அஸ்வினின் பிரம்மாண்ட அறிவியல் புனைவு படமான ‘கல்கி 2898 ஏடி’ இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நகர்கிறது. கல்கி 2 படத்தைத் தொடர்ந்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் ‘சலார் 2’ படத்தின் படப்பிடிப்பு 2027 ஜூன் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்திய பாக்ஸ் ஆபிஸில் பிரபாஸின் படங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· @_movietamil