பிரபுதேவா, ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் 'மூன்வாக்': கிறிஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 24 ரிலீஸ்!

பிரபுதேவா, ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் 'மூன்வாக்': கிறிஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 24 ரிலீஸ்!

இந்தியாவின் தலைசிறந்த நடன இயக்குனரும் முன்னணி நடிகருமான பிரபுதேவா மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நாயகன் யோகி பாபு இணைந்து நடித்துள்ள 'மூன்வாக்' (MoonWalk) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளதால் இசைப் பிரியர்களின் எதிர்பார்ப்பு வானளவிற்கு உயர்ந்துள்ளது. இயக்குனர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சதீஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நகைச்சுவை விருந்து படைத்துள்ளனர். புகழ்பெற்ற பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர்கள் இணைந்து இப்படத்தை மிக பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். முழுநீள நகைச்சுவை மற்றும் குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ள 'மூன்வாக்' திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறைப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வரும் டிசம்பர் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. பிரபுதேவாவின் நடனமும் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்களும் இப்படத்தில் மிகப்பெரிய சிறப்பம்சமாக இருக்கும்.

· Only Kollywood

பழைய செய்திகள்