மீண்டும் இணையும் பிரபுதேவா, சிம்ரன் ஜோடி: 'கமல் ஸ்ரீதேவி' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நடன மற்றும் காதல் ஜோடிகளில் ஒன்றான பிரபுதேவா மற்றும் சிம்ரன் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ள புதிய திரைப்படத்திற்கு 'கமல் ஸ்ரீதேவி' என்று பெயரிடப்பட்டுள்ளது. காதல் கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாக அலையை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் கிரிஷ் கொட்டார இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரபுதேவா, சிம்ரன் ஆகியோருடன் மிதுன், மெஹா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். காதல் மற்றும் நகைச்சுவை உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தந்து உருவாக்கப்படும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சியான் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 90ஸ் காலகட்டத்தில் திரையரங்குகளை அதிர வைத்த பிரபுதேவா மற்றும் சிம்ரனின் கெமிஸ்ட்ரியை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· Actor Kayal Devaraj